மேலும், தற்போது கொரோனா முழுவதுமாகக் குறைந்து வருவதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக அதிகளவு கொரோனா தொற்றுக் காணப்பட்ட கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்றுக் குறைந்துள்ளதால் விரைவில் தமிழக அரசு கூடுதல் தளர்வுகள் அளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.