மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி, இந்து மதம் போன்றவை தமிழ்நாட்டில் அவ்வப்போது விவாதப் பொருள் ஆவது வழக்கம். தற்போது, முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம். பியுமான ஆ. ராசா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்து மதம் குறித்து பேசிய காணொளி சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அதற்கு அமைச்சர் சேகர் பாபு, பதில் ஒன்றும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், இதுகுறித்து, பாஜக பிரமுகர் திருச்சி சூர்ய சிவா தன் டுவிட்டர் பக்கத்தில், திமுக ஆன்மீக அரசியல் செய்யுது என்று பேசின சேகர் பாபுவுக்கு காது கேட்கலை , அவருக்கு உதவும் வகையில் தமிழக பாஜக சார்பாக செவிட்டு மிஷின் வாங்கி தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் #செவிட்டுபாபு
@PKSekarbabu எனப் பதிவிட்டுள்ளார்.