கடந்த வாரத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2225 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தை 691 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்தன. குறிப்பாக அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மூலதன மதிப்பு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி குறைந்துள்ளதாகவும், டாடா கன்சல்டன்சியின் மதிப்பு 42 ஆயிரத்து 847 கோடி குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன