டி ராஜேந்தர் கட்சி உள்பட 7 தமிழக கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

புதன், 14 செப்டம்பர் 2022 (07:40 IST)
டி ராஜேந்தர் கட்சி உள்பட தமிழகத்தில் உள்ள ஏழு கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது
 
6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என்றும் அந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட சின்னமும் ரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது
 
அதன்படி நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து செயல்படாமல் இருந்த 86 கட்சிகளின் அங்கீகாரம் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன்படி தமிழகத்தில் மொத்தம் 7 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தரின் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்பதும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது 
தமிழகத்தில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட ஏழு கட்சிகளையும் கட்சிகள் விபரம் பின்வருமாறு:
 
1. கொங்குநாடு ஜனநாயக கட்சி
 
2. மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம்
 
3. எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி
 
4. தேசபக்தி புதிய நீதிக்கட்சி
 
5. தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம்
 
6. தமிழர் கழகம் 
 
7. இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்