அம்மா உணவகங்களை நிர்வகிக்க தனி அறக்கட்டளை! அரசாணை வெளியீடு!

புதன், 23 டிசம்பர் 2020 (17:44 IST)
அம்மா உணவகங்களை நிர்வகிக்க தனி அறக்கட்டளை உருவாக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்ட அம்மா உணவகம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகிறது. அங்கே இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும், சப்பாத்தி 2 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அண்டை மாநிலங்களிலும் இதுபோல திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில் இனிமேல் அம்மா உணவகத்தை நிர்வகிக்க தனி அறக்கட்டளை உருவாக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்