கமல் கூறிய அடுத்த நாளே தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகள், புகார் பகுதிகள் நீக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஊழல் புகார்கள் குறித்து நடிகர்கள் கமலுக்கும் ரஜினிக்கும் அனுப்புங்கள் என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
இது குறித்து கூறிய அவர், மக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும், ஊழல் குறித்தும் அமைச்சர்களுக்கும் அனுப்புங்கள் என கமல் கூறினார். ஆனால் அரசு பின்பற்றும் தவறான நடைமுறையால் அந்த புகார்கள் ஏதும் அமைச்சர்களை சென்றடையாது.
எனவே மக்கள் உங்கள் புகார்களை நடிகர்கள் கமல் மற்றும் ரஜினிக்கு அனுப்புங்கள் என கோரிக்கை வைக்கிறேன். அவர்கள் அதை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அப்போது தான் அந்த புகார்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் கமல் கூறிய உடன் இணையதள முகவரிகளை அமைச்சர்கள் நீக்கியது சிறுபிள்ளைத்தனமானது என்றார்.