வடகிழக்கு பருவமழையால் சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதீத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் மாவட்டங்களில் உள்ள பெருவாரியான ஏரிகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் சென்னையிம் மிக முக்கியமான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் விநாடிக்கு 1000 கனஅடி என்ற அளவில் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட பெருமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட நிலையில் 5 ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.