ஆம், சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,086 கன அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 21.13 அடியாக உள்ளது.
சென்ற 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முக்கிய காரணம் செம்பரம்பாக்கம் ஏரி. அந்த ஏரியில் நீர் இருப்பு அதிகம் ஆகி அந்த நீர் மொத்தமாக திறந்து விடப்பட்டு வெள்ளம் ஏற்பட்டது. அப்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அனைத்தும் அடையார் ஆற்றின் வழியாகத்தான் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.