அண்ணாமலை படித்து பாஸ் ஆனாரா? பிட் அடித்து பாஸ் ஆனாரா? செல்லூர் ராஜூ கேள்வி..!

Mahendran

வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (10:05 IST)
அண்ணாமலை படித்து பாஸ் ஆனாரா? அல்லது பிட் அடித்து பாஸ் ஆனாரா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில  மாதங்களுக்கு முன் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதிலிருந்து அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பாஜகவை  மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாகரிகமாக விமர்சனம் செய்தாலும் அடுத்த கட்ட தலைவர்கள் பாஜகவையும் அண்ணாமலையையும் படுமோசமாக விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அண்ணாமலை அதிமுக இன்னும் சில ஆண்டுகளில் அழிந்துவிடும் என்று கூறிய நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்

மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் அண்ணாமலை பேசி வருவதாகவும் அதிமுக அழிந்து போகும் என கூறிய அழகிரி இப்போது அரசியலிலே இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் அண்ணாமலை படித்து பாஸ் ஆனாரா? அல்லது பிட் அடித்து பாஸ் ஆனாரா? என்றும் அவர் கேள்வி அனுப்பிய நிலையில் அவரது இந்த கேள்விக்கு அண்ணாமலை என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்