செல்ஃபி விபரீதம் : புதுமணப்பெண் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி பலி !

திங்கள், 7 அக்டோபர் 2019 (09:21 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாம்பாறு அணையில் செல்ஃபி எடுக்கும்  ஆசையில் ஈடுபட்டிருந்த புதுமணப்பெண் உள்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகமெங்கும் செல்ஃபி மோகம் வேகமாகப் பரவிவருகிறது. பிரபல நட்சத்திரங்களுடன் இணைந்து செப்ஃபி எடுப்பது தொடங்கி, ஆபத்தான இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு லைக்குகள் பெறுவதற்காகவே பலர் விபரீதமான விளைவுகளை சந்தித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள்கள் கனிதா, சினேகா. இவர்கள் இருவரும் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தனர். கடைசி மகன் சந்தோஷ் ( 9 ஆம் வகுப்பு மாணவர் ) இவர்கள் நான்குபேருடன், புதுமணத்தம்பதியரான பிரபு - நிவேதா மற்றும் யுவராணி ஆகியோர் பாம்பாறு அணையை சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர்.
 
அங்கு சந்தோஷ், சினேகா, கனிதா,நிவேதா, யுவராணி ஆகியோர் தண்ணீர் நின்றிருந்தனர். கரையோரம் நின்றிருந்த பிரபு தனது செல்போன் மூலம் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்.
 
அப்போது, சந்தோஷ், புதுமணப்பெண் நிவேதா உள்பட 5 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சிஅடைந்த பிரபு யுவராணியை மட்டும் போராடி கரை சேர்த்தார்.ஆனால் மற்ற 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய சந்தோஷ், நிவேதா, கனிதா,சினேகா  ஆகியோரின் உடல்களை மீட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்