தவெக உடன் கூட்டணி வைக்கும் தவறை திருமாவளவன் செய்ய மாட்டார்: சீமான்

Mahendran

சனி, 2 நவம்பர் 2024 (15:03 IST)
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சிக்கு திருமாவளவன் ஆதரவு கொடுக்க மாட்டார் என்றும் அந்த தவறை அவர் செய்ய மாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் எங்களது குரு ஆசான் ஆசிரியர் எல்லாமே திருமாவளவன் தான். அவரது மாணவர்களான நாங்களே இவ்வளவு சிந்திக்கும்போது அவர் எவ்வளவு ஆழமாக சிந்திப்பார். கண்டிப்பாக விஜய் கட்சியுடன் அவர் கூட்டணி வைக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.
 
எதையும் கூட்டத்தை வைத்து கணக்கு போடக்கூடாது நயன்தாராவை பார்க்க கூட 4 லட்சம் பேர் கூடினார்கள். விஜயகாந்த்துக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடி இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
 
திராவிடமும் தமிழ் தேசியமும் வேற பேறானவை, இரண்டும் கொள்கையாக இருக்க முடியாது. ஒன்று கொள்கையை மாற்றுங்கள் அல்லது எழுதி கொடுப்பவரை மாற்றுங்கள் என்று விஜய்க்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்