இளையராஜாவுக்கு யுவன்சங்கர் ராஜா கூட ஓட்டுப்போட மாட்டார்: சீமான்

வெள்ளி, 8 ஜூலை 2022 (09:38 IST)
இசைஞானி இளையராஜாவுக்கு அவரது மகன் யுவன்சங்கர் ராஜா கூட ஓட்டு போட மாட்டார் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இளையராஜாவுக்கு சமீபத்தில் ராஜ்யசபா நியமன எம்பி  பதவி வழங்கப்பட்டது என்பதும் அவர் மோடியை புகழ்ந்து பேசியதால் தான் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இளையராஜாவுக்கு ராஜ்யசபா பதவி கொடுத்தது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போதே இளையராஜா பாஜகவுக்கு சென்றால் அவர் மகன் யுவன்சங்கர் ராஜா கூட ஓட்டு போட மாட்டார் என்று கூறினார்.
 
பழங்குடியினரை குடியரசுத்தலைவர் ஆக்கியவர்கள் அவர்களை பிரதமர் ஆக்குவார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்