மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் அதிகம்!

புதன், 17 மார்ச் 2021 (12:09 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.16 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 20 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து மேலும் கூறிய அவர்  தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார். அத்துடன் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக்கூடும் எனவும் அரசியல் கூட்டங்களால், குடும்ப நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றார். 
 
அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வோர் மாஸ்க் அணிவதில்லை என குற்றம் சாட்டிய அவர் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை  இந்தியாவில் தற்போது உருவாகியுள்ளது. அதிலும் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் தொற்று பதிப்பட்டோர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்றார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்