தமிழகத்தில் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த சங்குமால், ஓலைக்குடா, அக்னி தீர்த்தம் ஆகிய இடங்களில் கடல் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய கடலோரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்று வீசி வருவதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான கடல் சீற்றம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ராமேஸ்வரம் பகுதி சங்குமால், ஓலைக்குடா, அக்னி தீர்த்தம் ஆகிய இடங்களில் கடல் நீர் 100 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் சிறிது நேரத்திற்கு பின் கடல் நீர் மீண்டும் பெருகிவந்து சாதாரணமாக காட்சியளித்தன எனவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடல் உள்வாங்கிய செய்தி அப்பகுதி மக்களிடையேயும் சுற்றுல பயணிகளிடையேயும் பெரும் அச்சத்தையும் பீதியையும் உண்டாக்கியுள்ளது என தெரியவருகிறது.