இந்த நிலையில், அந்த மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு, போலீசாருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், தன்னை பிரேம்குமார் என்ற நபர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் பிரேம்குமரரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அந்த கிராமமே பெரும் சோகத்தில் உள்ளது.