தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து மற்றும் தனியாருக்கு சொந்தமான பல பேருந்துகள் பல்வேறு வழிதடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பலர் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்வது பெரும் பிரச்சினையாக உள்ளது.
சில இடங்களில் மாணவர்கள் அதை ஸ்டைல் என நினைத்து செய்வது ஒருபுறம் இருக்க, பல இடங்களில் அதிக பேருந்து வசதி இல்லாததால் கூட்ட நெரிசலில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பலரும் பயணித்து வருகின்றனர். இதனால் பல சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு விடுகின்றன. அப்படியான சம்பவம் சமயபுரம் அருகே நடந்துள்ளது.
பள்ளி முடிந்து ஊர் திரும்பும் மாணவர்கள் பேருந்தில் கூட்ட நெரிசலில் படிகளில் தொங்கியபடி பயணித்துள்ளனர். அதில் பின்னால் உள்ள படிக்கட்டில் தொங்கிய மாணவன் ஒருவன் தவறி கீழே விழுந்துள்ளான். நல்வாய்ப்பாக படுகாயங்கள் இன்று அவன் உயிர் தப்பியுள்ளான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் கூடுதல் பேருந்துகள் இயக்கினால் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.