வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க சாத்தியமில்லை! – தமிழக தேர்தல் அதிகாரி

செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (13:25 IST)
கொரோனா காரணமாக வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படலாம் என்ற செய்தியில் உண்மையில்லை என தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதற்கு நடுவே 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம் சரியான கட்டுப்பாடுகளை மேற்கொள்ளாததே காரணம் என சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கொரோனா காரணமாக வாக்குகளை எண்ணும் தேதி தள்ளிவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்