சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: வனத்துறையினர் அறிவிப்பு

சனி, 29 ஜூலை 2023 (18:44 IST)
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு நாளை செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. 
 
நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்திருக்கும் பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. இந்த காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதால் நாளை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறை என தெரிவித்துள்ளனர் 
 
மலையில் பரவிய காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் போராடி வருவதாகவும் எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோயிலுக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் 
 
எனவே நாளை நடைபெற உள்ள பிரதோஷ வழிபாட்டுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்றும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்