இன்னும் எவ்வளவு காலம் தான் ஆகும்: சாத்தான்குளம் வழக்கு குறித்து நீதிபதி கேள்வி!

திங்கள், 13 டிசம்பர் 2021 (18:26 IST)
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்த வழக்கு முடிவடைய இன்னும் எவ்வளவு காலம்தான் ஆகும் என நீதிபதி கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் விசாரணை எந்த நிலையில் உள்ளது எனவும், மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது
 
மேலும் விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை குறிப்பிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்