ஜெயலலிதா சோஃபாவில் உட்காரும் சசிகலா: அவர் இருக்கும் போது இருந்தாரா?

செவ்வாய், 20 டிசம்பர் 2016 (14:48 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் தினமும் பலர் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.


 
 
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தொடக்கத்தில் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு மக்கள் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தையும் பார்வையிட்டனர்.
 
அப்போது பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது யாருக்கும் அங்கு அனுமதி இல்லை. இந்நிலையில் அதிமுக பெண் நிர்வாகி ஒருவருக்கு ஜெயலலிதாவின் இல்லத்துக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவர் கொதித்தெழுந்துவிட்டார்.
 
கார்டனுக்குள் ஏன் எங்களை அனுமதிக்கவில்லை? அம்மா வாழ்ந்த வீட்டை நாங்கள் பார்க்கக் கூடாதா? அம்மாவுக்கு இணையாக யாரும் கிடையாது. அம்மா சோஃபாவில் சசிகலா உட்காருவதா? அம்மா இருந்தபோது உட்கார்ந்தாரா? அம்மா வீட்டில் இவர்களுக்கு என்ன வேலை? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்