தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய அளவில் பிரபலமான ஒரு அரசியல் தலைவர். துணிச்சலான, தைரியமான, இரும்பு பெண் என புகழப்படும் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கே சவால் விடும் அளவுக்கு துணிந்துவிட்டார் சசிகலா புஷ்பா.
மேலும் அவரது பேட்டியில், ஏற்கெனவே செரீனா என்ற பெண்ணின் மீது என்ன என்ன வழக்குகள் பாய்ந்தன என்பதும் சின்ன மேடம் சசிகலாவின் கணவரே ஜெயிலில் எவ்ளோ நாள் இருந்தார். அவரின் சகோதருக்கு என்ன நடந்தது என்பது எல்லா தெரியும்.
அவர்களுக்கே அந்த கதி என்றால். எனக்கு, எனது கணவர், மகன் ஆகியோருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனக்கு உண்மை மட்டும் தெரியும். என சசிகலா புஷ்பா பழைய விஷயங்களை கிளறியது அதிமுகவினரை சூடேற்றி உள்ளது.