ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்தில் சசிகலா தியானம்!

புதன், 15 பிப்ரவரி 2017 (13:24 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சகசிலா, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று சபதம் செய்து விட்டு அங்கிருந்து ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்துக்கு கிளம்பி சென்றார்.


 
 
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானதை அடுத்து, சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு அவகாசம் தர முடியாது எனவும், உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் இல்லையென்றால் கைது செய்ய உத்தரவிடுவோம் என நீதிபதிகள் கூறிவிட்டனர்.
 
இதனால் கார் மூலமாக, பெங்களூருக்கு செல்ல சசிகலா உள்ளிட்ட மூவரும், போயஸ் கார்டனிலிருந்து கிளம்பினர். இதனையடுத்து ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று, அஞ்சலி செலுத்தினார். அப்போது முனுமுனுத்தவாறே தனது கையால் ஜெ.வின் சமாதியில் அடித்து 3 முறை சபதம் செய்தார்.


 
 
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு செல்லும் முன்னர் ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்துக்கும் சென்றார் சசிகலா. அங்கு எம்ஜிஆர் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய சசிகலா அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். பின்னர் வெளியே இருந்த எம்ஜிஆர் சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்