சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதா உயிர் இழந்து விட்டதால் மற்ற மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு சிறையில் இருந்தபடியே மாற்று உடைகளில் சசிகலா ஷாப்பிங் சென்றதாக பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. மேலும் சிறை விதிகள் மீறி சலுகைகள் பெற்றதாக சசிகலா மீது கர்நாடகா சிறைத்துறை முன்னாள் டிஜிபி ரூபா புகார் அளித்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார். ஆனால் ரூபா வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் குற்றச்சாட்டுக் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் உள்ளது.