சசிகலா பரோலில் விடுவிக்கப்பட்டாலும், சில கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டே பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, சென்னையை விட்டு வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும், போயஸ் இல்லத்தில் தங்கக் கூடாது, அரசியல்வாதிகளைச் சந்திக்கக் கூடாது, ஊடகங்களை சந்தித்து பேட்டியளிக்க கூடாது போன்றவை அவருக்கு விதிக்கப்பட்ட முக்கிய நிபந்தனைகள்.
டிடிவி தினகரன் தனது பேட்டியில் ஜெயலலிதாவுக்காக சிறை சென்ற சசிகலா என கூறியுள்ளது ஜெயலலிதா விசுவாசிகள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் ஜெயலலிதா குற்றம் செய்தார், அவரது குற்றத்துக்காக எந்த தவறும் செய்யாத சசிகலா சிறையில் உள்ளார் என மறைமுகமாக கூறியுள்ளார் தினகரன்.