ஏற்கனவே ஓ.பி.எஸ் அணியை சேர்ந்தவர்கள், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இரு அணிகளும் இணைவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அதேபோல், சசிகலாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற கருத்தின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும், தினகரன் ஆதரவாளர்களும் மோதிக்கொள்கிறார்கள். மறுபக்கம், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. ஆனால், எதற்கு பதிலளிக்காமல் அமைதி காத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில், ஆகஸ்டு 5ம் தேதிக்கு பின் என் நடவடிக்கைகளை பாருங்கள் என அதிரடி காட்டுகிறார் டிடிவி. தினகரன்.