திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரை தொண்டர்கள் யாரும் வந்து பார்க்க வேண்டாம் என கூறப்பட்டது. இதனையடுத்து அவருக்கு உடலில் கொப்பளங்கள் வருவதாகவும் இது ஒரு மரபு நோய், இதற்கு முன்னர் அவரின் அக்காவுக்கு இதே நோய் வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாளிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.