சசிகலாவுடன் சமரசம் செய்து கொண்டாரா எடப்பாடி? அப்ப தினகரன் நிலைமை?

செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (07:00 IST)
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஒன்றரை வருடங்களே இருக்கும் நிலையில் இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என திமுகவினர் மிகத் தீவிரமாக உள்ளனர். இரண்டு முறை ஆட்சியை பிடிக்க முடியாமல் இருக்கும் திமுக, இந்த முறை ஆட்சியை பிடித்து ஸ்டாலினை முதல்வர் பதவியில் உட்கார வைக்க வேண்டும் என தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர் 
 
 
ஆனால் அதே நேரத்தில் எதிர்முகாமில் உள்ள அதிமுக, ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தீவிர முயற்சியில் இருந்து வருகிறது. குறிப்பாக சசிகலாவுடன் சமரசம் செய்து விட்டால் தேவரின ஓட்டுக்கள் மற்றும் பணப்பிரச்சனை இருக்காது என்பதால் சசிகலாவுடன் சமரச முயற்சி நடைபெற்று வருவதாகவும், இரட்டை இலை இருக்கும் இடம் தான் தனது இடம் என்பதை ஏற்கனவே சசிகலா தெளிவாக இருப்பதால் இந்த சமரச முயற்சிக்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும், எடப்பாடி முதல்வராகவும் தொடர இருதரப்பினரும் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
எனவே வரும் பொதுத் தேர்தலில் எப்படியாவது மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அதிமுக குறிக்கோளாக இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் சமரசம் செய்து கொண்டால் தினகரன் நிலைமை அதோகதிதான் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன. தினகரன் கட்சி தற்போது சிக்கலில் இருக்கும் நிலையில் சசிகலாவும் சமரசம் செய்து கொண்டால் அவரும் அதிமுகவுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டும் அல்லது அரசியலில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்