அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில் நேற்று சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்றார் டிடிவி தினகரன். இந்த சந்திப்புக்கு பின்னர் சசிகலாவும் தினகரனும் உச்சக்கட்ட விரக்தியிலும், கண்ணீரிலும் பிரிந்ததாக கூறப்படுகிறது.
சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து முழுவதுமாக அகற்றிவிட்டு கட்சியை வழிநடத்த ஓபிஎஸ்ஸும், ஆட்சியை வழி நடத்த எடப்பாடியும் இருக்கட்டும் என பாஜக் திட்டமிட்டு அதிமுகவின் இரு அணிகளையும் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நடந்த அனைத்து விஷயங்களையும் சசிகலாவிடம் கூறியுள்ளார் தினகரன். இனிமேல் பொறுமையாக இருக்க போவதில்லை எனவும், எந்த பிரச்சனை வந்தாலும் கட்சி பணிகளில் தீவிரமாக இறங்குவேன் எனவும் சசிகலாவிடம் தினகரன் கூறிவிட்டு வந்துள்ளார்.