காந்தியவாதி சசிபெருமாள் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2015 (23:54 IST)
காந்தியவாதி சசிபெருமாளின் உடலுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
 

 
மதுவிலக்குப் போராட்டத்தில் உயிர் நீத்த காந்தியவாதி சசி பெருமாளின் உடல், அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. சசி பெருமாளின் வீட்டிற்கு அருகே, அவரது சொந்த நிலத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
 

 
இந்த நிகழ்ச்சியில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் செந்தில்குமார் வாண்டையார், மனிதம் மனித உரிமைக்கான அமைப்பின் இயக்குனர் அக்னி. சுப்பிரமணியம் மற்றும் சமுக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்