சரவணா ஸ்டோர்ஸில் ரெய்டு; கணக்கில் வராத ஆயிரம் கோடி! – வருமானவரித்துறை அதிர்ச்சி தகவல்!

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (14:06 IST)
சென்னை சரவணா ஸ்டோர்ஸில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை பதுக்கியதாக தெரிய வந்துள்ளது.

சென்னையில் தி.நகர், பாடி உள்ளிட்ட பல இடங்களில் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 2 நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் சோதனை நடந்தது.

இந்நிலையில் கணக்கில் வராத ரூ.1000 கோடி வருவாயை மறைத்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ரெய்டில் 10 கோடி ரூபாய், 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், ஜவுளிகள் பிரிவில் கணக்கில் வராத ரூ.150 கோடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்