இன்றும் இடி மின்னலுடன் கனமழை - எங்கெங்கு தெரியுமா?

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:14 IST)
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில்  மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் மழை குறைந்திருந்தாலும் சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் தென் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதன்படி  இன்று தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். 
 
சென்னை பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்