யார் இந்த சிதம்பரம்? ஏன் இந்த வழக்கு??

சனி, 24 மார்ச் 2018 (11:39 IST)
ஜனநாயகத்தின் குரல்வளை பிக்பாஸின் ஆக்டோபஸ் கரங்களால் நெறிக்கப்படுகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எதிர் கட்சிகளை பழிவாங்குவதை பற்றி துளியும் சிந்திக்காத நம் காங்கிரஸ் தலைவர்கள் இன்று பழிவாங்கப்படுகிறார்கள்.

 
ராணுவ ஆட்சி போல எழுதுவதும் பேசுவதும் குற்றமாக கருதப்படுகிறது. “கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர்” என்று நாம் கொண்டாடிய நவீன காமராஜர் தலைவர் ப.சிதம்பரத்தின் மீது சேறு வீசப்படவில்லை சேற்றுக்குள்ளேயே அவரை தள்ளிவிடும் முயற்சி நடக்கிறது.
 
அப்பழுக்கற்ற அந்த தலைவன் மிகக் கடுமையாக குறிவைக்கப்பட்டிருக்கிறார். எத்தனையோ வழக்குகளில் எத்தனை பேரையோ  காப்பாற்றிய இந்தியாவின் மிக மூத்த வழக்கறிஞர் தன் பிள்ளைக்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்.
 
அரசாங்கத்தின் உச்சத்தில் அமர்ந்து கொண்டிருந்தால் துளியும் தவறும் செய்யாதவர்களை கூட அலைக்கழித்து அவமானப்படுத்தி பயமுறுத்தலாம் என்பதற்கு இந்த வழக்கு எதிர்காலத்தில் ஓர் உதாரணமாக இருக்கப்போகிறது.

 
பிக்பாஸ் என்ன செய்தாலும் மக்களின் குரலாக சிதம்பரம் இருப்பார். கங்கையையே நீ சேறாக்கி மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கி கொண்டிருக்கிறாய்.
 
சேற்றை கங்கையாக்கி என் தலைவன் வீறுகொண்டு வெளியே வருவார்.
 
தொகுதிக்குள்ளே சுற்றுப்பயணத்தில் தன் கார் தவிர பின்னே ஒரு கார் வந்தால் கூட ஏன்? எதற்கு? என்று கேள்வி எழுப்பி மாவட்ட தலைவர், வட்டார, நகர தலைவர்  என்னுடன் காரில் இருக்கிறார்கள். நீங்கள் ஏன் பின்னால் வருகிறீர்கள்? போய் உங்கள் வேலை, குடும்பத்தை பாருங்கள் என்று காமராஜருக்கு பின்னே சொன்ன ஒரே அரசியல் தலைவர் சிதம்பரம்.
 
ஒரு காரை எடுத்துக் கொண்டு பெட்ரோல் போட்டு சுற்றினால் கைக்காசு தொண்டனுக்கு வீணாகும் அப்படி அனுமதிக்கும் போதுதான் தவறின் முதல் சுற்று ஆரம்பம் என்பதை நன்கறிந்தவர்.
 
குடும்பத்திற்கும், தொழிலுக்கும் பின்தான் அரசியல் என்பதை அழுத்தமாக காங்கிரஸ் தொண்டனுக்கு அறிவுறுத்தியவர். சுட்டு விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாதவரை நோக்கி…. எத்தனை வழக்குகள் போட்டாலும் மக்கள் நம்பப்போவதில்லை. நீதிமன்றங்களும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கின்றன. இறைவன் பார்த்துக்கொண்டே இருக்கின்றான்.
 
ப.சிதம்பரம் பிறந்தது கானாடுகாத்தான் அரண்மனையில். இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுனைடட் இந்தியா இன்சுரன்சு கம்பெனி, அண்ணாமலை பல்கலைகழகம், செட்டிநாடு சிமென்ட், செட்டிநாடு குழுமம், இராஜபாளையம் கற்பகாம்பாள் மில்ஸ், ஏராளமான காபி,டீ,ஏலக்காய் எஸ்டேட்கள் இவர்களது மூதாதையர் நிறுவனங்கள் இன்றைக்கும் நாட்டுடமையாக்கப்பட்டவை தவிர மீதம் இவர்கள் வசமே இருக்கிறது.
 
சிதம்பரம் என்பவர் யார் என சிவகங்கை அறியும். காங்கிரஸ் தொண்டன்  அறிவான். பிக்பாஸ் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை . 
 
இத்தனை வழக்குகளுக்கு பின்னும் புதுடெல்லி காங்கிரஸ் மாநாட்டில்  “DEMONITIZATION” போது வந்த பணத்தை திருப்பதி கோவில் ஊழியர்கள் ரிசர்வ் வங்கி ஊழியர்களை விட வேகமாக எண்ணுவார்கள் என்று சொன்னாரே?
 
மோடியும் ரிசர்வ் வங்கியும் பழைய நோட்டை எண்ணவில்லையென்றாலும், மக்கள் “மோடி அரசாங்கத்தின்” நாட்களை எண்ணத்துவங்கிவிட்டார்கள்.
 
S.பழனிவேல்ராஜன்
நகர் காங்கிரஸ் தலைவர்
சிங்கம்புணரி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்