சமீபத்தில் டெல்லியில் நடந்த புத்தக வெளியிட்டு விழாவில் பாரதிய ஜனதா அதிருப்தி தலைவர் யஷ்வந்த் சின்ஹா பேசியபோது, பாஜக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வரித்துறை அதிகாரிகள் கெடுபிடியுடன் நடந்து கொண்டதை வரி பயங்கரவாதம் என்று கூறினார்கள். ஆனால், 2016-ம் ஆண்டு பாஜக அரசு பணமதிப்பிழப்பு செயல்பாட்டை அமல்படுத்தி வரி பயங்கரவாதத்துக்கு வித்திட்டது. இதனால் வருமான வரித்துறை 18 லட்சம் வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை விசாரிக்க வருமான வரித்துறைக்கு போதிய வசதிகள் உள்ளதா? இந்த வழக்குகள் விசாரணை முடிய எத்தனை ஆண்டுகள் ஆகும்? என கேள்வி எழுப்பினார்.