சசிகலா முதல்வராகும் நேரத்தில் ஜெயலலிதா ஆதரவு அதிகாரிகளின் தொடர் ராஜினாமா!

செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (12:31 IST)
முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக கடந்த ஜீன் மாதம் ஜெயலலிதாவால் பதவி பிரமானம் செய்யப்பட்ட சாந்தா ஷீலா நாயர் அந்த பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.


 
 
மாநில திட்ட கமிஷன் துணை தலைவராக இருந்து, பதவி காலம் மே மாதத்துடன் முடிந்ததும், அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சாந்தா ஷீலா நாயரை அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கவனிக்கும் தனி அதிகாரியாக நியமித்தார். 
 
ஆனால், தற்போது தனது சொந்த காரணங்களுக்காக சாந்தா ஷீலா நாயர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக தெரியவந்துள்ளது. இதே போல் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் ஒருவரான தமிழக அரசின் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனும் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜெயலலிதா நியமித்த அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக பதவியை ராஜினாமா செய்வது அரசியலில் எதோ சூழ்சமம் இருப்பதை உணர்த்துவது போல் உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்