இவ்வாறு சமந்தா கவர்ச்சியாக நடிப்பது, புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது போன்ற செயல்கள் நாகார்ஜுனாவின் குடும்பத்தினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இது தொடர்பாக சமந்தாவிடம் பல முறை பேசியும் அவர் மாறுவதாக தெரியவில்லையாம்.
இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் சற்றுமுன் நடிகை சமந்தா தனது இன்ஸ்ட்டாகிராமில் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், ஊடக நண்பர்களும், ரசிகர்களும் இந்த கஷ்டமான நேரத்தில் தங்களை தொல்லை செய்யவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.