அதிக விலைக்கு மதுபானம் விற்பனை....தனியார் மதுபான கடைக்கு தற்காலிக அனுமதி ரத்து

சனி, 20 மே 2023 (22:25 IST)
திருப்பூர் மாவட்டம் பல்லத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் அதிக விலைக்கு மதுபானம் விற்றதாகப் புகார் எழுந்த நிலையில், அந்த விடுதிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பாரில் ரூ.300க்கு பீர் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் அந்த தனியார் விடுதிக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு, மதுபாட்டில்களின் இருப்பு மற்றும் விற்பனை பற்றிய முறையான கணக்குகள் எதுவும் இல்லாததைக் கண்டறிந்தனர்.

இந்த நிலையில்,  அதிகவிலைக்கு மதுவிற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுபான விடுதிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி தன் டுவிட்டர் பக்கத்தில, ''திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் Murugampalayam Health & Recreation Club என்ற பெயரில் 2018-19 ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட க்ளப் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதால் அதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, மது வழங்கும் கூடத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் Murugampalayam Health & Recreation Club என்ற பெயரில் 2018-19 ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட க்ளப் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதால் அதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, மது வழங்கும் கூடத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. pic.twitter.com/0Dt9VFNwHe

— V.Senthilbalaji (@V_Senthilbalaji) May 20, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்