சைதாப்பேட்டை பெண் பழ வியாபாரி படுகொலை.. கொலையான பெண்ணின் தங்கை கைது..!

ஞாயிறு, 23 ஜூலை 2023 (12:28 IST)
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் ஐந்து பேர் கைதாகி இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் கொலையான பெண்ணின்  தங்கை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன  
 
ஜூலை 19ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வந்த புறநகர் ரயிலில் ராஜேஸ்வரி என்ற பழ வியாபாரி பயணம் செய்தார். அவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிய போது மர்ம நபர்கள் சில அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
 
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தற்போது ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  அவர்களில் ஒருவர் கொலையான ராஜேஸ்வரியின் தங்கை என்றும் கூறப்படுகிறது. கைதானவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்