சைதை துரைசாமியின் மகன் சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. ஓட்டுநர் சடலமாக மீட்பு..!

Siva

திங்கள், 5 பிப்ரவரி 2024 (08:18 IST)
முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது அவரது கார் ஆற்றில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாகவும், இந்த விபத்தில் டிரைவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்திற்கு முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி என்பவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்று இருந்தார். இந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென  கார் ஆற்றில் விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் வெற்றி துரைசாமி நண்பர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சைதை துரைசாமி மகன் வெற்றியை காணவில்லை என்றும் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  

இது குறித்த தகவல்களை இமாச்சலப்பிரதேச போலீசார் தமிழ்நாடு காவல்துறைக்கு தெரிவித்ததாகவும் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்