ஜெயங்கொண்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேனெஜராக பணியாற்றி வந்த விஷால் நாராயண் காம்ளே என்பவர், வங்கியில் லோன் கேட்டு வந்த மருத்துவருக்கு இந்தி தெரியததால் லோன் தர முடியாது என மறுத்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து அந்த மேனேஜர் திருச்சி வங்கி கிளைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மொழி வெறியுடன் நடந்து கொண்டதாக அந்த மேனேஜர் மீது பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் “இப்படிப்பட்ட மொழி வெறியனுக்கு பணியிட மாற்றத்தைவிட பணியிடை நீக்கம்தான் சரியான தண்டனை” என்று கூறியுள்ளார்.