சமீபத்தில் அதிமுக கொடி அதில் இருந்து அண்ணாவின் படத்தை நீக்கவேண்டும் என்றும் எஸ்வி சேகர் விமர்சனம் செய்தது சர்ச்சைகளைக் கிளப்பியது. அதனை அடுத்து அதிமுக எம்எல்ஏவாக இருந்த போது வாங்கிய சம்பளத்தை எஸ்வி சேகர் திருப்பித் தருவாரா? என அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எஸ்வி சேகர்-ஜெயக்குமார் மோதல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு நேற்று பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ’எஸ்வி சேகர் ஏதாவது பேசி விட்டு வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என்றும், அதனால் அவர் கேட்டதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் மற்றும் அதிமுகவினர் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக நடிகர் எஸ்வி சேகர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் ஓடி ஒளிபவன் இல்லை. என்னை எல்லோரும் பிராமன சத்ரியன் என்பார்கள். எனக்கு ஜான் பாண்டியன் முதல் நிறைய பேர் நண்ப்ர்களாக உள்ளனர். ஓட்டுக்கேட்க வரவில்லை என சொல்கிறார்கள். என்னைக் கூப்பிட்டால் வரப்போகிறேன். யாரோ முகம் தெரியாத ஒருவர் ஓட்டுக் கேட்க நான் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு இருக்க முடியுமா?