கலைஞரின் மனோ தைரியம் ஒவ்வொரு முதியவரிடம் இருக்க வேண்டும்: பிரபல நடிகர்

செவ்வாய், 14 நவம்பர் 2017 (23:31 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தற்போது தேறி வருவதால் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வரும் அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாரத பிரதமர் நரேந்திரமோடி, கருணாநிதியை சந்தித்த பின்னர் பாஜக தமிழக தலைவர்கள் பலர் கருணாநிதியை சந்தித்து வருகின்றனர்.


 


இந்த நிலையில் சமீபத்தில் கருணாநிதியை சந்தித்த பாஜக பிரமுகர் நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர். இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நேற்று இரவு 8.45 க்கு கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவரால் பேச இயலவில்லையானாலும் மலர்ந்த சிரிப்புடன் என்னைப்பார்த்தார். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என சொல்லி GET WELL SOON card ஐ கொடுத்தேன். கலைஞரின் மனோ தைரியம் Will power ஒவ்வொரு முதியவரிடம் இருக்க வேண்டிய குணம்' என்று கூறியுள்ளார்

திமுக தலைவரை பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து சந்தித்து வருவது மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க அச்சாரமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்