ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு

திங்கள், 23 மே 2022 (15:56 IST)
ரஷ்யா ராணுவம் உக்ரைன் மீது படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர்  தொடர்ந்து 87 வது நாளாக நடந்து வரும் நிலையில், இதுவரை இரு தரப்பிலும்  ஆயிரக்கணக்கில் வீரர்களும் மக்களும் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறாது.

இந்த நிலையில், மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் சுமார் 2 ஆயிரம் பேர்  சரணடைந்துள்ளனர்.

இதனால் மரியுபோல் நகரம் தற்போது ரஷ்யாவின் கட்டுபாட்டிற்குள் வந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உலகில் மிகப்பெரிய தானிய உற்பத்தில் நாடான உக்ரைனில்  விவசாக நிலங்கள் அதிகமுள்ள ஒடேசா என்ற நகரத்தை முற்றுகையிட்டுள்ளனர் ரஷ்யா ராணுவத்தினர்.  அந்த நகரை ரஸ்யா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் அங்கு பஞ்சம் ஏற்படலாம் என தகவல் வெளியாகிறது. ஏற்கனவே சுமார் 400 டன் கால் நடை தீவனங்களை ரஷியா அழிததாக விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்