தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தையடுத்து முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து, அவரது முதல்வர் அரியணையில் அமரப் போகிறார் நடிகர் அஜித் என்ற செய்தி தீயாய் பரவியது.
இதனையடுத்து கேரளாவில் உள்ள ஊடகங்கள் அடுத்த முதல்வர் நடிகர் அஜித் தான், அவர்தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என சர்ச்சையை கிளப்பி விட்டன. இந்த செய்தி அவரது ரசிகர்களால் அதிகமாக பரப்பப்பட்டு காட்டுத் தீயை போல பரவியது.
இதனையடுத்து அஜித் தரப்பினர் இதனை மறுத்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அஜித் அன்பு வைத்திருக்கிறார். தன்னுடைய தாயை போல நினைக்கிறார். ஜெயலலிதாவின் தைரியம், பண்பு, அக்கறை போன்றவரை அஜித்துக்கு பிடிக்கும்.