முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம்; 2 ஆண்டுகள் சிறை!

திங்கள், 6 ஜூலை 2020 (21:22 IST)
இந்தியாவில்  கொரொனா வேகமாக பரவிய புதிதில் கேரள மாநிலத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் அம்மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இன்றுவரை 2252 பேர் கொரொனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இன்று அம்மாநிலத்தில் புதியாக 193 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஓராண்டுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கபப்ட்டுள்ளது.

 பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பொது இடங்களில்  எச்சில் துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது சமூக இடைவெளி கடைப்பிடித்தலும்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்