முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து அந்த தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆர்கே நகரில் வெளியூரில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்திருப்பதாகவும், ரவுடிகளை குவித்திருப்பதாகவும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளர்.
ஆர்கே நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் மதுசூதனன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொகுதியில் உள்ளூர்வாசிகளை விட வெளியூர்வாசிகள் ஆயிரக்கணக்கில் இறக்குமதி செய்துள்ளனர் என்றார்.
மேலும் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது எனவும் ரவுடிகளை குவித்து வருகின்றனர் எங்கு பார்த்தாலும் ரவுடிகளாக உள்ளனர். ரவுடிகளை போலீஸ் குடியிருப்புகளில் தங்க வைத்துள்ளனர். காலியாக உள்ள போலீஸ் குடியிருப்புகளில் எல்லாம் ரவுடிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார்.