ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு: அரிசி ஆலைகள் வேலைநிறுத்தம்!

சனி, 16 ஜூலை 2022 (11:15 IST)
ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு: அரிசி ஆலைகள் வேலைநிறுத்தம்!
அரிசிக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 4000 அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அரிசி கோதுமை பருப்பு என அனைத்து உணவு வகைகளும் 5% ஜிஎஸ்டி வரி என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக நடுத்தர குடும்பம் மட்டுமின்றி தினம் வேலைக்குச் செல்லும் அடித்தட்டு மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
இதனையடுத்து மத்திய அரசு உடனடியாக அரிசிக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ஆலைகளும் இன்று வேலைநிறுத்தம் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்