அளந்து போட்டாதானே எடை குறையும்? ரேஷன் பொருட்கள் பாக்கெட் செய்து விற்பனை! - சேலத்தில் தொடக்கம்!

Prasanth Karthick

வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (10:11 IST)

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய உணவுப்பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

தமிழ்நாடு முழுவதும் கிராமங்கள் தொடங்கி நகரம் வரை அனைத்து பகுதிகளிலும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், அதன்மூலமாக மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சில ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும்போது எடை குறைவதாக சில சமயம் குற்றச்சாட்டு எழுகிறது. அதுமட்டுமல்லாமல் உணவுப்பொருட்களை மூட்டை மூட்டையாக கடைகளுக்கு அனுப்பும்போது அவற்றை பராமரிப்பதிலும் சிக்கல்கள் உள்ளது.

 

அதனால் ரேஷன் பொருட்களை எடை நிறுத்து பாக்கெட் போட்டு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சேலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அடுத்தக்கட்டமாக சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளிலும் தலா 1 ரேஷன் கடையை தேர்வு செய்து பாக்கெட் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மேலும் விரிவுப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்