தமிழிசையை முதல்வராக்க ஒத்திகை: திவாகரன் அதிரடி!

வியாழன், 16 நவம்பர் 2017 (15:16 IST)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது தமிழசையை முதல்வராக்க ஒத்திகை என சசிகலாவின் தம்பி திவாகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.


 
 
மயிலாடுதுறைக்குச் சென்ற திவாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தங்கள் குடும்பத்தை குறிவைத்து நடந்த வருமான வரித் துறையினரின் சோதனை மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் கோவை ஆய்வு பற்றிப் பேசினார்.
 
ஆளுநர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதை அமைச்சர்கள் வரவேற்று பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை பார்க்கும்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தமிழிசையை நிறுத்தி முதல்வராக்க ஒத்திகை நடப்பது போலத் தெரிகிறது. இதற்காக ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் விட்டுக்கொடுத்துவிடுவது போலத் தெரிகிறது என்றார் திவாகரன்.
 
மேலும் வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து பதில் அளித்த திவாகரன், எங்கள் குடும்பத்தினர் மீது நடந்த வருமான வரிச் சோதனை தோல்வியில் முடிந்துவிட்டது. எங்களை மிரட்டிப் பணியவைக்கவே இந்த சோதனை. எங்களது அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் இப்போதும் எங்களுடனேயே இருக்கின்றனர் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்