அரசிடம் செல்லுங்கள் ஏன் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள்? நீதிபதி காட்டம்

வியாழன், 5 ஜனவரி 2017 (15:40 IST)
அரசை தேர்ந்தெடுக்கும் நீங்கள் ஏன் அரசை அணுகுவதில்லை, அரசின் நிர்வாக முடிவுக்காக ஒவ்வெரு முறையும் ஏன் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள் என்று நீதிமன்றத்தில் நீதிபதி கேள்வி எழுப்பினார்.


 

 
விவசாயிகள் தற்கொலை தொடர்பாக கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த மனுவில், விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க மாநிலம் முழுவதும் குழு அமைக்க வேண்டும் என்றும், பருவ மழை பொய்க்கும்போது நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தை காக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
 
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர், அரசை தேர்ந்தெடுக்கும் நீங்கள் ஏன் அரசை அணுகுவதில்லை, அரசின் நிர்வாக முடிவுக்காக ஒவ்வெரு முறையும் ஏன் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள் என்று வினா எழுப்பினார்.
 
இதையடுத்து விவசாயிகள் தற்கொலை குறித்து நான்கு வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்