இந்நிலையில் கிளாம்பக்கம் புதிய பேருந்து நிலையம் கோயம்பேட்டில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் முன்னதாகவே இருப்பதால், கிளாம்பக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு விரைவுப் பேருந்துகளில் கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முன்பதிவு செய்தவர்களுக்கு நடத்துநர்கள் மூலம் குறைக்கப்பட்ட தொகையை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்